தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு ஜரூர்! அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை தேவை

Added : ஜன 12, 2020
Advertisement

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில், லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு ஜரூராக நடைபெற்று வருகின்றது.

கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று கடலுார் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது.இந்த தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திருக்கோவிலுார் பகுதிகளில் கடந்த சில ஆண்டு களாக அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது.இந்த மணல் குவாரிகளில் இருந்து, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் மணல் ஏற்றி சென்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மணல் குவாரிகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதை தொடர்ந்து, தென்பெண்ணை ஆற்றில் இருந்து லாரிகள் மூலம் மணல் ஏற்றுமதி செய் வது முற்றிலும் நிறுத்தப் பட்டது.இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமான தொழில்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப்பகுதிகளில் இருந்து லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றப்பட்டு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் திருடுவதை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருட்டு மணல் ஏற்றும் லாரிகள், மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருட்டு மணல் வாகனங்களுக்கு துணைபோகும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.ஆனாலும், விழுப்புரம் அடுத்த பிடாகம், பேரங்கியூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகள் மூலம் மணல் திருட்டு அதிகரித்து வந்தது.

தற்போது பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் பகல் நேரத்திலும் லாரிகள் மூலம் மணல் திருட்டில் தனிநபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, விழுப்புரம் பகுதி தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்றுவரும் மணல் திருட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X