பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்களில் ஆபத்தான பயணம் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

Added : ஜன 12, 2020
Advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும், அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை நீடித்து வருகின்றது.

விழுப்புரம் நகரில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்காக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தினந்தோறும், அரசு டவுன் பஸ்களில் கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு கிராமங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றது. இதனால், பள்ளி, கல்லுாரி நேரங்களில் அரசு பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகின்றது.இதனால், பஸ்களின் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்கின்றனர். இது மாணவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக உள்ளது.எனவே, அரசு பஸ்களில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவர்கள் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X