கோட்ட கலால் அலுவலர் குழுஅனுமதியில்லாத பார்களில் ரெய்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோட்ட கலால் அலுவலர் குழுஅனுமதியில்லாத பார்களில் 'ரெய்டு'

Added : ஜன 13, 2020

விழுப்புரம்: அரசு அனுமதியில்லாத பார்களில் கோட்ட கலால் அலுவலர் தலைமையிலான குழுவினர் தீவிர ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் அருகில் உள்ள அரசு அனுமதியில்லாத பார்கள் அதிகரித்து வந்தது. இந்த பார்களை கண்டறிந்து வழக்கு பதிவு செய்யுமாறு, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்படி, விழுப்புரம் கோட்ட கலால் அலுவலர் ஆனந்தகுமார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், டாஸ்மாக் குடோன் மேலாளர் பாஸ்கரதாஸ் ஆகியோர் கொண்ட குழுவினர், விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள அரசு அனுமதியில்லாத பார்களில் கடந்த இரண்டு நாட்களாக தீவிர ரெய்டில் ஈடுபட்டு வந்தனர்.இதில், விழுப்புரம் சாலமேடு, விக்கிரவாண்டி அடுத்த ஆசூர், சிறுவாக்கூர் உள்ளிட்ட 8 இடங்களில் அனுமதியின்றி செயல்பட்ட பார்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X