சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகை நந்திதாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., தொல்லை

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை : 'வாலிபர் ஒருவர் ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பி தொல்லை தருகிறார்' என, நடிகை நந்திதா ஸ்வேதா கூறியுள்ளார்.

'அட்டக்கத்தி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என, மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். சமூகவலைதள பக்கத்தில், தனக்கென கணக்கு வைத்துள்ள இவர், 'இன்ஸ்டாகிராம்' போன்ற பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.'என்னை பின்தொடரும் வாஞ்சி செழியன் என்பவர், ஆபாச , எஸ்.எம்.எஸ்.,களை, இன்ஸ்டாகிராமில் அனுப்பி, தொல்லை தருகிறார்' என, சமூகவலைதள பக்கத்தில் நடிகை கூறியுள்ளார்.

மேலும், 'இவர்களுக்கெல்லாம் குடும்பமே இல்லையா; இதுபோன்ற நபர்களை என்ன செய்வது?' என, கேள்வி எழுப்பி உள்ளார்.இதுதொடர்பாக, போலீசில் புகார் தராத நந்திதா, 'மீடூ' பாணியில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X