அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணி குறித்து பேச அதிமுக.,வில் தடை

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (2)
Advertisement
ADMK,OPS,EPS,OPanneerselvam,EdappadiPalanisamy,அதிமுக,கூட்டணி, பன்னீர்செல்வம், பழனிசாமி, எடப்பாடி_பழனிசாமி, ஓபிஎஸ், இபிஎஸ்

சென்னை : 'கூட்டணி குறித்தும், தொடர் நடவடிக்கைகள் குறித்தும் கட்சித் தலைமை முடிவெடுக்கும்; கட்சியினர் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்' என, அ.தி.மு.க., தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து, கட்சியினர் தங்களின் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல்பார்வைகளையும், பொது வெளியிலோ, பேட்டி என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம்.

அ.தி.மு.க.,வின் தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள்பற்றியும், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தீர ஆராய்ந்து, கட்சி கொள்கை கோட்பாடுகளின்படி முடிவெடுப்பர். கட்சியினர், மக்கள் நலப்பணிகளை திறம்பட ஆற்றி, கட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
13-ஜன-202006:49:03 IST Report Abuse
blocked user வாய்ப்பூட்டு போட்டுவிட்டால் பேசமாட்டார்களாக்கும்... விட்டால் வேகமாக திமுகவுடன் கூட கூட்டு வைப்பார்கள். எப்படியோ காங்கிரஸ் போல மானமில்லாமல் இராஜீவை கொன்றேன் என்ற சொன்ன ஒரு கட்சியுடன் கூட கூட்டு என்று இறங்காமல் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-202005:26:59 IST Report Abuse
Nepolian S மானங்கெட்ட ஜென்மங்களா அம்மா அம்மானு அந்த எதிர்த்த அனைத்தையும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கையெழுத்துப் போட்டுக் கொடுத்த அடிமைகளா இன்னும் ஓராண்டுக்கு பிறகு அடிமை கூட்டம் என்ற பெயரைதவிர என்னத்தை கொண்டுசெல்ல போகிறீர்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X