பொது செய்தி

இந்தியா

ஈராக் செல்ல அனுமதி மறுப்பு

Added : ஜன 13, 2020
Share
Advertisement

மும்பை : பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, நம் நாட்டு பயணியர் ஈராக் செல்ல, வெளியுறவுத் துறை அனுமதி மறுத்துள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஈராக்கில் உள்ள நஜாப் செல்ல, அந்நாட்டு விமானம், நேற்று முன்தினம் காத்திருந்தது. ஈராக்கில் உள்ள புனித தலங்களுக்கு, தாவூதி போரா யாத்ரீகம் செல்வது வழக்கம்.அந்த விமானத்தில், யாத்திரை செல்ல, 1௧௦ இந்தியர்கள் பயணிக்க இருந்தனர். திடீரென, விமானத்தில் செல்ல, நம் நாட்டு பயணியருக்கு, சுங்கத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். வெளியுறவுத் துறை உத்தரவின்படி, ஈராக் செல்லும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், இந்த நடவடிக்கை என்று கூறினர்.

மறு உத்தரவு வரும் வரை, ஈரான், ஈராக், பாரசீக வளைகுடா பகுதிகளில், இந்திய விமானங்கள் பறக்க வேண்டாம் என்றும், அந்த நாடுகளுக்கு, வெளிநாட்டு விமானங்கள் இந்திய பயணியரை ஏற்றிச் செல்ல வேண்டாம் என்றும், விமானத் துறை எச்சரித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X