பொது செய்தி

தமிழ்நாடு

வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அவதி

Added : ஜன 13, 2020
Advertisement
 வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அவதி

காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கோவில் அருகில், பராமரிப்பு இல்லாத கழிப்பறைக்கு செல்ல முடியாமல், பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில், பாரம்பரிய நகர மேம்பாட்டு திட்டத்தில், புதிய கழிப்பறை கட்டப்பட்டது.கடந்தாண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் நடந்த அத்தி வரதர் வைபவத்தின்போது, இந்த கழிப்பறை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.கழிப்பறையை பராமரிக்க, நகராட்சி பணியாளர் நியமிக்கப்பட்டார். அவர், பொதுமக்களிடம் சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாயும், இயற்றை உபாதைக்கு, 10 ரூபாயும் வசூல் செய்கிறார். ஆனாலும், கழிப்பறையை சுத்தமாக பராமரிப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறியதாவது:வரதராஜ பெருமாள் கோவில், அத்தி வரதர் வைபவத்திற்கு பின், இந்திய அளவில் சிறப்பு பெற்று விளங்குகிறது. தினமும், ஆயிரக்கணக்காண பக்தர்கள் செல்லும் இந்த கோவிலுக்கு, ஒரே ஒரு கழிப்பறை தான் உள்ளது.அந்த கழிப்பறையை பயன்படுத்த பணம் வாங்கினாலும், முறையாக பராமரிப்பு கிடையாது. ஆண்கள் கழிப்பறையில், கதவுகள் உடைந்து கிடக்கின்றன.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகளை முறையாக செய்து தரவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, கோ சாலை உள்ளே, பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த கழிப்பறை அங்கிருப்பது, பக்தர்களுக்கு தெரிவதில்லை.தற்போது, மேல்மருவத்துார் கோவிலுக்கு செல்லும் பெண் பக்தர்கள், ஏகாம்பரநாதர் கோவிலுக்கும் வருகின்றனர். அவ்வாறு வருவோர், இயற்கை உபாதை கழிக்க அவதிப்படுகின்றனர்.தனியார் கழிப்பறையில், அதிக கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சில திருமண மண்டபங்களில், குளிக்க, இயற்கை உபாதை கழிக்க, 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.எனவே, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட, நவீன கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X