பயங்கரவாதிகளுக்கு உதவி காஷ்மீர் டி.எஸ்.பி., கைது

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் தப்பிச் செல்வதற்கு உதவிய போலீஸ் அதிகாரி, கைது செய்யப்பட்டார்.

ஜம்மு - காஷ்மீர் போலீசில், டி.எஸ்.பி.,யாக பணியாற்றுபவர் தேவிந்தர் சிங். வீர தீர செயலுக்காக, கடந்தாண்டு ஜனாதிபதி விருது பெற்றவர். இவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள், சமீபகாலமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று குல்காம் அருகே, ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சென்ற காரை, போலீசார் மடக்கி சோதனை நடத்தினர். அந்த காரில், தேவிந்தர் சிங்குடன், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளும் இருந்தனர்.

இவர்கள், காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் தேடப்பட்டு வந்தவர்கள். இதையடுத்து, மூன்று பேரையும், காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். இரண்டு பயங்கரவாதிகளும், காஷ்மீரிலிருந்து தப்பிச் செல்வதற்காக, தேவிந்தர் சிங் உதவியது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
13-ஜன-202016:18:06 IST Report Abuse
Mano தீவிரவாதிகளை அரெஸ்ட் செய்தால் உடன் சுட்டு கொன்றுவிடவேண்டும். இவர்களை சிறையில் போட்டால் இவனைசேர்ந்தவர்கள் வேறு யாரையாவது பிணையாக பிடித்து இவர்களை விடுதலை செய்துவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X