பொது செய்தி

இந்தியா

சபரிமலை ரயில் பாதை செலவு ரூ.1,566 கோடியாக உயர்வு; கேரள அரசு ஒத்துழைக்கவில்லை என பியுஷ் கோயல் புகார்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (7)
Advertisement
Sabarimala,Train,railway,IndianRailway,PiyushGoyal,சபரிமலை, ரயில்வே, பியூஷ்கோயல்,கோயல்,ரயில்பாதை

புதுடில்லி: ''கேரள அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால், சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்கும் பணிக்கு, கூடுதலாக, 512 சதவீதம் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது,'' என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புனித தலமான சபரிமலையை, ரயில்வே பாதையில் இணைக்க வேண்டும் என, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். 517.70 கோடி ரூபாய் இதையடுத்து, 1997 - 98ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், அங்காமலியிலிருந்து சபரிமலைக்கு, 111 கி.மீ., ரயில் பாதை, 517.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு, 2006ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்காமலி - காலடி, காலடி - பெரும்பாவூர் இடையே, முதல் கட்டமாக, ரயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், கேரள அரசின் ஒத்துழைப்பின்மை ஆகியவற்றால், தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள முடியாமல் போனது. இதனால், 1997ல், 550 கோடி ரூபாயாக இருந்த திட்ட செலவு, 2017ல், 1,566 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 512 சதவீதம் கூடுதல். 50 சதவீதம்.

மேலும், திட்ட செலவில், 50 சதவீதத்தை ஏற்றுக் கொள்ளுமாறு, 2011 மற்றும், 2012ல், மூன்று கடிதங்களை, கேரள அரசுக்கு, மத்திய அரசு எழுதியுள்ளது. 2015ல், 50 சதவீத செலவை ஏற்றுக் கொள்ள, கேரள அரசு சம்மதித்தது. ஆனால், 2016ல், இந்த சம்மதத்தை, கேரள அரசு வாபஸ் பெற்றது. மீண்டும், 2017ல், இந்த திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு தருமாறு கோரி, கேரள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், கேரள அரசிடமிருந்து பதில் இல்லாததால், கடந்த ஆண்டு, செப்டம்பரில், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ஏனெனில், ரயில்வே மட்டும் தனியாக, அவ்வளவு தொகையை செலவழிக்க முடியாது. கேரள அரசு ஓத்துழைப்பு கொடுத்தால், இந்த திட்டத்தைசெயல்படுத்த, ரயில்வே தயாராக உள்ளது.இவ்வாறு கடிதத்தில் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.

தனியார் உதவியுடன் வளர்ச்சி:
ரயில்வேயில் வளர்ச்சியை ஏற்படுத்த, தனியார் உதவி செய்ய வேண்டும் என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார். மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் அவர் கூறியதாவது :ரயில்வே துறையை மேம்படுத்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வேகமாக வளர்ச்சி பெற, தனியாரின் ஒத்துழைப்பும் தேவை. இப்படி சொல்வதால், ரயில்வே தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மெதுவாக செல்லும் ரயில்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிவேகமாக செல்லும் ரயில்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன், இந்த திட்டம் நிறைவேற்றப்படும். பயணியரின் வசதிகளை மேம்படுத்த, ரயில்வேக்கு, அடுத்த, 12 ஆண்டுகளில், 50 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதை அரசு பட்ஜெட்டில் பெற முடியாது. தனியார் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, நிறைவேற்ற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202013:48:19 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சர்ச்சுக்கு , மசூதிக்கு ரயில் விடுகிறேன் என்று சொன்னால் கம்மிகள் பாய்ந்துவந்து உதவுவார்கள் , இந்து கோவில்களுக்கெல்லாம் செய்வார்களா
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜன-202012:05:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பட்டேலுக்கு பத்தாயிரம் கோடியில் சிலை.. பம்பைக்கு ஒரு ஆயிரத்திநூறு கோடி கிடையாதா?
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜன-202011:44:39 IST Report Abuse
Lion Drsekar முதலில் சட்டத்தை மாற்றி அமைத்தால் மட்டுமே இனி நாடு விளங்கும், இல்லையென்றால் அவனவன் தன் குடும்ப சொத்தாக்கிக்கொண்டு மற்றவர்களை ....மீண்டும் ஒரு சர்தார் வல்லபாய் பட்டேல் வந்தால் மட்டுமே நாட்டில் ஒற்றுமை வரும், இல்லையென்றால் ஒன்று செய்யுங்கள் சுதந்திரம் பெறுவதற்கு இருந்த அந்த அந்த மன்னர்களிடம் நாட்டை கொடுத்து விடுங்கள், அவர்கள் ஆண்டபோது ஜாதி, மத , மொழி வெறி இருந்ததாக தெரியவில்லை, தற்போது இருக்கும் மது , ஆட்சிக்காக அண்டை நாட்டைக்கைப்பற்றுதல் மட்டுமே இருந்ததாக சரித்ததில் படித்திருக்கிறோம், போகட்டும். தற்போது எல்லாமே சீரழிந்து கொண்டு போகிறதே? யாருமே எந்த ஒரு நடவடிக்கையும் எங்குமே எடுப்பதாக தெரியவில்லையே ? தவறானவர்கள் பின்னால் சென்றால் இராஜ வாழ்வு என்றாகிவிட்டது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X