பொது செய்தி

தமிழ்நாடு

புல் அகற்றும் பணி அரைகுறை

Added : ஜன 13, 2020
Advertisement
 புல் அகற்றும் பணி அரைகுறை

வாலாஜாபாத்:பிரதான சாலை ஓரமாக, தரைப்பாலங்களின் அருகே, புல் அகற்றும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் கண்துடைப்பிற்கு செய்வதாக, வாகன ஓட்டிகளிடையே புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், 1,217 கி.மீட்டரில், பல வித சாலைகள் உள்ளன. இச்சாலை ஓரமாக, சிறு மற்றும் பெரிய தரைப்பாலங்கள் உள்ளன.இந்த தரைப்பாலங்களின் இரு புறமும், வாகன ஓட்டிகளின் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு, புல் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், தரைப்பாலங்களின் அருகே, அடிக்கடி விபத்து ஏற்பட நேரிடுகிறது.
குறிப்பாக, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை மற்றும் காஞ்சிபுரம் - திருத்தணி சாலையில், 12க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.இதை தவிர்க்க, தரைப்பாலங்களின் ஓரமாக, ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன், புல்லை அகற்றும் பணி, அவ்வப்போது செய்யப்படுகிறது.இப்பணியில், ஒரு புறம் மட்டும் புற்கள் அகற்றப்படுகின்றன; மறு புறம் அவ்வாறு செய்வதில்லை.இதனால், காஞ்சிபுரம் - திருத்தணி சாலையில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X