திருப்பதி, 'டிவி' சேனல் பெண் ஊழியர் தெலுங்கு நடிகர் மீது பாலியல் புகார்

Added : ஜன 13, 2020
Advertisement

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் தலைவரும், நகைச்சுவை நடிகருமான பிருத்வி மீது, பெண் ஊழியரை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவரை, கைது செய்ய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.பக்தி சேனல்திருமலை ஏழுமலையான் கோவில் உட்பட, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், உற்சவங்களை பக்தர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் என்ற பெயரில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், 'டிவி' சேனல் செயல்பட்டு வருகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழிகளில் ஒளிபரப்பாகும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நிர்வாக அலுவலகம், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள, அலிபிரி பஸ் நிலையம் பகுதியில் உள்ளது.

இதில், 100க்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், சேனலின் பெண் ஊழியர் ஒருவர், திருப்பதியில் உள்ள, ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில், மாநில செயலாளர் முரளியிடம், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவித்தார். சேனல் சேர்மனாக பதவியில் இருக்கும், நகைச்சுவை நடிகர் பிருத்வி, தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், இரவு நேரத்தில், மொபைல் போன் மூலம், மிரட்டுவதாகவும், அந்த பெண் ஊழியர் புகார் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக, ஆடியோ பதிவுகளையும் அந்த பெண் ஒப்படைத்தார். போராட்டம்இதையடுத்து, இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக, ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.தெலுங்கு நடிகர், பிருத்வி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பதியில் அவருடைய படத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருப்பதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் முரளி, 'இந்த விவகாரத்தில், நடிகர் பிருத்வியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். நடவடிக்கை எடுக்க தவறினால், தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X