குழந்தைகள் பலாத்கார சம்பவங்கள் இரண்டாவது இடத்தில் தமிழகம்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவத்தில், மஹாராஷ்டிராவுக்கு அடுத்ததாக, தமிழகத்தில் அதிக அளவில் புகார்கள் பதிவாகி உள்ளன. நாட்டில், 2018ம் ஆண்டில், 21 ஆயிரத்து, 605 குழந்தைகள், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதில், மஹாராஷ்டிராவில், 2,832 குழந்தைகளும், தமிழகத்தில், 1,457 குழந்தைகளும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் பலாத்கார
child_abusing,TamilNadu,குழந்தைகள்,பலாத்காரம்,தமிழகம்,தமிழ்நாடு

புதுடில்லி : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவத்தில், மஹாராஷ்டிராவுக்கு அடுத்ததாக, தமிழகத்தில் அதிக அளவில் புகார்கள் பதிவாகி உள்ளன.

நாட்டில், 2018ம் ஆண்டில், 21 ஆயிரத்து, 605 குழந்தைகள், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதில், மஹாராஷ்டிராவில், 2,832 குழந்தைகளும், தமிழகத்தில், 1,457 குழந்தைகளும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் பலாத்கார சம்பவங்கள் குறித்து, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வன்முறை மற்றும் பலாத்காரத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், 2012ல், 'போஸ்கோ' சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ், 2017ல், 32 ஆயிரத்து, 608 வழக்குகள் பதிவாகின. 2018ல், 22 சதவீதம் அதிகரித்து, 39 ஆயிரத்து, 827 வழக்குகள் பதிவாகின. அதாவது, 2018ல், நாட்டில், தினமும், 109 குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு உள்ளாகிஉள்ளனர். கடந்த, 2018ம் ஆண்டில், நாடு முழுவதும், குழந்தைகள் பலாத்காரம் தொடர்பாக, 21 ஆயிரத்து, 605 புகார்கள் பதிவாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில், 21 ஆயிரத்து, 401 பேர் சிறுமியர். மற்றவர்கள் சிறுவர்கள். இதில், மஹாராஷ்டிராவில், 2,832 குழந்தைகளும், தமிழகத்தில், 1,457 குழந்தைகளும், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த, 10 ஆண்டுகளில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 2008ம் ஆண்டில், 22 ஆயிரத்து, 500 புகார்கள் பதிவாகின.கடந்த, 2017ல், ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 32 புகார்களாக அதிகரித்தது. 2018ல், ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 764 புகார்கள் பதிவாகியுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில், 2018ல், குழந்தைகள் கடத்தல் வழக்குகள் மட்டும், 44.2 சதவீதமாக உள்ளது. 2018ல் மட்டும், 67 ஆயிரத்து, 134 குழந்தைகள் மாயமாகியுள்ளன.

இதில், 41 ஆயிரத்து, 191 பேர் சிறுமியர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், முதலிடத்தில், உத்தர பிரதேசம் உள்ளது. 2018ல், இந்த மாநிலத்தில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பாக, 19 ஆயிரத்து, 936 வழக்குகள் பதிவாகிஉள்ளன. குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ், 2018ல், 501 வழக்குகள் பதிவாகின. இது, 2017ம் ஆண்டை விட, 26 சதவீதம் அதிகம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


'ஆசிட்' தாக்குதல்குறைவு


இது பற்றி, தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில், 2017ல், 244 ஆசிட் தாக்குதல் வழக்குகள் பதிவாகின. 2018ல், இது, 228 ஆக குறைந்துள்ளது. இதில், மேற்கு வங்கத்தில், 36; உ.பி.,யில், 32; தெலுங்கானாவில், 10 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-ஜன-202019:47:44 IST Report Abuse
Sampath Kumar சூப்பர் ? இதுக்கு ஏல்லாம் அவார்ட?/// கிடையாதா ??
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-202017:14:16 IST Report Abuse
Endrum Indian சே எதிலும் முதலிடத்தில் என்று சொல்லி இதில் நாம் முதலிடம் அடையவில்லையே என்று அரசு மிகுந்த வேதனையில் இருக்கின்றது???இப்படி சொல்லலாமா??
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
13-ஜன-202015:48:46 IST Report Abuse
M S RAGHUNATHAN When will Tamilnadu occupy the first place ? Tasmac naatil idhu sahajam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X