பேப்பர் நடவு முறையில் சாதித்த தஞ்சை விவசாயி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேப்பர் நடவு முறையில் சாதித்த தஞ்சை விவசாயி

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (4)
Share
தஞ்சாவூர்: தஞ்சை அருகே விவசாயி ஒருவர் பேப்பர் நடவு முறையில் சீரக சம்பா நெல் பயிரிட்டு அதிக மகசூல் எடுத்துள்ளார்.தஞ்சாவூர் அருகே சடையார்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம் 58. இவர் 1 ஏக்கர் நிலத்தில் நான்கு மாதங்களுக்கு முன் பாரம்பரிய நெல்லான சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, வெள்ளைப் பொன்னி ஆகிய நெல் ரகங்களை பேப்பர் நடவு முறையில் சாகுபடி செய்தார். நேற்று
பேப்பர் நடவு முறையில் சாதித்த தஞ்சை விவசாயி

தஞ்சாவூர்: தஞ்சை அருகே விவசாயி ஒருவர் பேப்பர் நடவு முறையில் சீரக சம்பா நெல் பயிரிட்டு அதிக மகசூல் எடுத்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே சடையார்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம் 58. இவர் 1 ஏக்கர் நிலத்தில் நான்கு மாதங்களுக்கு முன் பாரம்பரிய நெல்லான சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, வெள்ளைப் பொன்னி ஆகிய நெல் ரகங்களை பேப்பர் நடவு முறையில் சாகுபடி செய்தார். நேற்று முன்தினம் சீரக சம்பா நெற் கதிர்களை அறுவடை செய்தார்.

விவசாயி ராமலிங்கம் கூறியதாவது: ரசாயன உரங்களை பயன்படுத்தி பல்வேறு நெல் ரகங்களை பயிரிட்டு வந்தேன். மழை அதிகம் பெய்யும் போது பூச்சி தாக்குதல் ஏற்பட்டு மகசூல் குறைவாக கிடைக்கும். சாகுபடி செலவும் அதிமாக இருந்தது.ரமேஷ் என்பவரின் வழிகாட்டுதல்படி விதை நெல்லை காகிதத்தில் மடித்து நாடா போல் திரித்து வயலில் நடவு செய்ய ஏக்கருக்கு 4500 ரூபாய் செலவானது. இடைவெளி விட்டு நெல் முளைத்ததால் அதிகம் துார் கட்டியது.

ஒரே ஒரு முறை மட்டுமே களை எடுத்து ஒரு முறை இயற்கை உரம் தெளிக்கப்பட்டது. இதற்கு ஏக்கருக்கு 7000 ரூபாய் மட்டுமே செலவானது. தற்போது சீரக சம்பா நெற்கதிர்களை நாங்களே கைகளால் அறுவடை செய்து பாரம்பரிய முறைப்படி களத்தில் அடித்து நெல்மணிகளை தனியாகவும் வைக்கோலை தனியாக பிரித்தோம். எட்டு மூட்டை நெல் மகசூல் கிடைத்துள்ளது.

இன்னும் 20 நாட்களில் மாப்பிள்ளை சம்பாவும் வெள்ளைப் பொன்னியும் அறுவடை செய்ய உள்ளோம். பாரம்பரிய நெல்லுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இனி வரும் காலங்களில் பாரம்பரிய நெல்லை பயிரிடுவதோடு மற்ற விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X