ஈரான் வம்சாவளி --அமெரிக்க பெண் விண்வெளி வீராங்கனையாக தேர்வு

Added : ஜன 13, 2020
Advertisement
 ஈரான் வம்சாவளி --அமெரிக்க பெண் விண்வெளி வீராங்கனையாக தேர்வு

ஹூஸ்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே, பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈரான் வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண், அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டாவும், முதல் விண்வெளி வீராங்கனையாகவும் தேர்வாகி உள்ளார்.

ஈரானை பூர்வீகமாக கொண்டவர் மொக்பெலி, ௩௬. இவரது பெற்றோர், அங்கு, நடந்த முஸ்லிம் புரட்சியால், ஜெர்மனிக்கு குடியேறினர். அங்கு பிறந்த மொக்பெலி, அமெரிக்காவின் நியூயார்க்கை அடுத்த, பால்ட்வின் நகரில் வளர்ந்தார். விண்வெளி ஆய்வாளராக விரும்பி, ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்தார், மொக்பெலி. பெற்றோர் விருப்பம் காரணமாக, அமெரிக்க ராணுவ பைலட்டாக பணியில் சேர்ந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான, ௧௫௦ தாக்குதல்களில், ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர் பைலட்டாக மொக்பெலி பணியாற்றி உள்ளார்.

இவர், ஈரான் வம்சாவளியை சேர்ந்த முதல் விண் வெளி வீராங்கனையாகவும் தேர்வு பெற்றுள்ளார். இது குறித்து, மொக்பெலி கூறியதாவது:ஈரானை பூர்வீகமாக கொண்ட எனக்கு, அமெரிக்க ராணுவத்தில் எந்த பிரச்னையும் இல்லை. நான் எல்லோரிடம் இருந்தும் கற்றுக்கொள்கிறேன். ஈரான் வம்சாவளியை சேர்ந்த முதல் விண்வெளி வீராங்கனையாக தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், பணிகளை மேற்கொள்ள பயிற்சி பெற்று வருகிறேன். உலக நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள், விண்வெளியில் அதிகமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X