அரச குடும்பத்தில் பிரச்னை: ராணி இன்று ஆலோசனை

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (4)
Advertisement

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தில் இருந்து, இளவரசர் ஹாரி மற்றும் அவருடைய மனைவி மேகன் வெளியேறும் பிரச்னை தொடர்பாக, ராணி இரண்டாம் எலிசபெத், குடும்ப உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.






பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக, இளவரசர் ஹாரி, 35, அவருடைய மனைவியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன், 38, சமீபத்தில் அறிவித்தனர்.இது, அரச குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில தினங்களாக, ஹாரியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வந்தன.இந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத், 93, அவசர குடும்ப ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். நார்போக்கில் உள்ள சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.





இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி, ஹாரி, அவருடைய சகோதரர் வில்லியம், இவர்களுடைய தந்தையான இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கனடாவில் இருக்கும் மேகன், தொலைபேசி மூலம் இந்தக் கூட்டத்தில் இணைந்து கொள்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆலோசனைக்குப் பின், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-202017:05:05 IST Report Abuse
Endrum Indian நமக்கு என்ன அதனால்?? அவர்கள் குடும்பத்திலிருந்து அவர்கள் வெளியேறுகின்றார்கள் இது இன்றைய இந்து இளைய தலைமுறை இந்தியாவில் செய்வதை போல
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-202007:03:05 IST Report Abuse
ஆப்பு ரிடையர் ஆகவே மாட்டாங்களா? எத்தனை வருஷமா சார்லஸ் காத்துக்கிட்டிருப்பாரு?
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
13-ஜன-202006:04:35 IST Report Abuse
blocked user அரியணை வேண்டாம், சாதாரண குடிமகனாவே வாழ்கிறேன் என்று சொல்லுபவனை கூப்பிட்டு வைத்து பட்டம் கட்டுவது ஞாயமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X