பொது செய்தி

தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து: 1, 675 இடங்களில் ஏற்பாடு

Added : ஜன 13, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி கூட்டரங்கில், ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையேற்றார்.அப்போது, அவர் பேசியதாவது:போலியோ என்னும், இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க, 25 ஆண்டுகளாக, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி கூட்டரங்கில், ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையேற்றார்.அப்போது, அவர் பேசியதாவது:போலியோ என்னும், இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க, 25 ஆண்டுகளாக, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.வரும், 19ம் தேதி, போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. மாவட்டத்தில், 1,675 மையங்களில், 2.67 லட்சம் குழந்கைகளுக்கு வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில், ரயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில், சொட்டு மருந்து வழங்கப்படும்.
பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர் என, 5,450 பேர் ஈடுபடுகின்றனர். தவிர, 54 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X