விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரத்தால் திருப்பம்

Added : ஜன 13, 2020
Advertisement

டெஹ்ரான் : ஐரோப்பிய நாடான உக்ரைனின் விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, மேற்கு ஆசிய நாடான ஈரானில், போராட்டங்கள் துவங்கியுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த, பிரிட்டன் துாதர் கைது செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானி, சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்கு தலில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மற்றொரு மேற்கு ஆசிய நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது, ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.இந்த நிலையில், ஈரானின் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட, உக்ரைன் நாட்டு விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், 176 பேர் பலியாகினர்.

'இந்த தாக்குதலை ஈரான் தான் நடத்தியது' என, பல நாடுகள் குற்றஞ்சாட்டின. ஆனால், அதை ஈரான் மறுத்து வந்தது.ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியபோது, உக்ரைன் விமானம் தவறுதலாக தாக்கப்பட்டதாக, ஈரான் ஒப்புக் கொண்டது. இந்த விமான தாக்குதலில் உயிரிழந்தோரில் பெரும்பாலானோர், ஈரானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உக்ரைன் விமானம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரானின் டெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள், நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த, ஈரானுக்கான பிரிட்டன் துாதர் ராப் மெக்கேர் கைது செய்யப்பட்டார். சிறிது நேரத்துக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார்.இந்த கைது சம்பவத்துக்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, சமூக வலைதளத்தில், ஆங்கிலம் மற்றும் ஈரானின் பார்சி மொழிகளில் வெளியிட்டுள்ள செய்தியில் டிரம்ப் கூறியுள்ளதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கடந்தாண்டு நவம்பர் - டிசம்பரில் ஈரானில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நடந்த வன்முறைகளில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, அங்கு மீண்டும் போராட்டங்கள் துவங்கியுள்ளன. அவற்றை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அரசுக்கு எதிராக போராடி வரும், வீரமுள்ள, நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்க தாக்குதலில், முக்கிய ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக, ராணுவ மூத்த அதிகாரி, ஈராக் பார்லிமென்டில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X