காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு

Added : ஜன 13, 2020
Advertisement

வாஷிங்டன் : பல நாடுகளின் துாதர்கள், ஜம்மு - காஷ்மீருக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது, முக்கியமான நடவடிக்கை என அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட, 15 நாடுகளைச் சேர்ந்த துாதர்கள், ஜம்மு - காஷ்மீரில், பயணம் மேற்கொண்டனர். அந்த பயணத்தில், அங்குள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக உள்ளூர் மக்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேசினர்.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப் பிரிவை ரத்து செய்த பின், வெளிநாட்டு துாதர்கள், அங்கு சுற்றுப்பயணம் நடத்தி, நிலைமையை நேரில் அறிந்துள்ளனர். இந்நிலையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, அமெரிக்க துணைச் செயலர் அலைஸ் வெல்ஸ், இந்த வாரம் தெற்காசியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியாவில் நடைபெறும், ரைசினா மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். பயணத்தை துவங்கும் முன், ஜம்மு - காஷ்மீர் சூழல் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் துாதர்கள், ஜம்மு - காஷ்மீருக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டதை கூர்ந்து கவனித்தோம். அது, ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் என பலரும் காவலில் வைக்கப்பட்டுள்ளது, இணைய சேவை முடக்கம் ஆகியவை கவலையளிக்கின்றன. அங்கு, விரைவில் இயல்பு நிலை திரும்புவதை காண காத்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X