பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலையோர கடை வியாபாரம் ஜோர்

Added : ஜன 13, 2020
Advertisement
 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலையோர கடை வியாபாரம் ஜோர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி சாலையோர கடைகள் வியாபாரம் களை கட்டியது. இதனால், காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், காந்தி சாலையில் பொங்கல் பண்டிகையையொட்டி சாலையோர கடைகள் அதிகரித்துள்ளன. 100 கடைகள்பல்வேறு வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பண்டிகை காலங்களில் இது போன்று துணி கடைகள் வைத்து, வியாபாரம் செய்வது வழக்கம்.நடப்பாண்டும், நுாற்றுக்கணக்கான கடைகள் முளைத்துள்ளன. இதனால், காஞ்சிபுரம், அதை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
குறைந்த விலைசிறுவர் - சிறுமியர் முதல், அனைத்து தரப்பு மக்களும், தேவையான ஆடைகள், வேஷ்டி, சேலைகள் வரை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.இதனால், காஞ்சிபுரம், காந்தி சாலையில், வாகனங்கள் அதிகரித்துள்ளதால், காலையில் இருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இன்னும், இரு நாட்கள் சாலையோர கடைகள் வியாபாரம் நடைபெறும் என, சாலையோர கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X