பெண் பயணி வெடிகுண்டு மிரட்டல் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கோல்கட்டா : கோல்கட்டாவில் இருந்து புறப்பட்ட விமானத்தில், பெண் பயணி ஒருவர், வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதால், மீண்டும் அங்கேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் கோல்கட்டாவில் இருந்து மும்பைக்கு, 'ஏர் ஏசியா' பயணியர் விமானம், நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. புறப்பட்ட சில வினாடிகளில், விமானத்தில் இருந்த, மோஹினி மோண்டால், 25, என்ற பெண் பயணி, விமான ஊழியர்கள் குழுவிடம் ஒரு காகிதத்தை கொடுத்து, அதை, பைலட்டிடம் கொடுக்குமாறு கூறினார்.அந்த காகிதத்தில், தன் உடல் முழுவதும், வெடிகுண்டுகள் கட்டப்பட்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும், அவற்றை வெடிக்கச் செய்துவிடப் போவதாகவும், குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த விமான பைலட், கோல்கட்டாவிலேயே மீண்டும் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். மிரட்டல் விடுத்த பெண் பயணியை, கைது செய்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று சோதனையிடப்பட்டது. விமானம் முழுவதும், வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது. மாற்று ஏற்பாடு மூலம், மற்ற பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
13-ஜன-202010:01:55 IST Report Abuse
Muthukrishnan,Ram அந்த பெண் குற்றவாளி என்பது இரண்டாவது விஷயம் குடிபுகள் ஏரியாவுக்கு போகும் முன் அவளை தொட்டு, தடவி, சோதனை செய்து உள்ளே அனுப்பிய அந்த அதிகாரிதான் முதல் குற்றவாளி. அந்த அதிகாரி தனது பணியை சரியாக செய்து இருந்தால் விமானத்தில் கால் வைக்கும் முன்பே பிடித்திருக்கலாம். பாது காப்பு வளையத்தில் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறது. கவனம் தேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X