மேலும் 2 அடுக்குமாடி குடியிருப்பு தரைமட்டம் ; சுப்ரீம் கோர்ட் உத்தரவு।ப்படி கேரளாவில் நடவடிக்கை

Added : ஜன 13, 2020
Advertisement

கொச்சி : கேரள மாநிலம் கொச்சியில், மேலும் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புகள், வெடிபொருள் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொச்சியை அடுத்த மாராடு பகுதியில், காயல் என்ற உப்பங்கழிகள் உள்ளன. இதன் அருகே, கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிராக, அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அவற்றை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின், நேற்று முன்தினம், இரண்டு கட்டடங்கள் தகர்த்து அகற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தலா, ௫௫ மீட்டர் உயரம் கொண்ட, 'ஜெயின் கோரல் கோவ்' மற்றும் 'கோல்டன் காயலோரம்' ஆகிய இரண்டு அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகளை, வெடி வைத்து அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதனால், அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இருந்தவர்கள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சுற்றுப்பகுதியில், ௧௪௪ தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. வெடி மருந்து உதவியுடன், சில வினாடிகளில் அடுக்குமாடி கட்டடம் தகர்ந்து, பெரும் துாசி மண்டலமாக மாறியது.

இதை காண, ஏராளமானோர் அங்கு திரண்டனர். எர்ணாகுளம் கமிஷனர் விஜய் சாகரே, ''இந்த பணிகளால், அருகில் உள்ள கட்டடங்களில் பாதிப்பு இல்லை. கட்டட கழிவுகள் ஏரியில் விழவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X