பிரதமருக்கு குவிந்த 5.5 லட்சம் கடிதம்; வெளியிட்டு அமித் ஷா பெருமிதம்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஆமதாபாத் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு, நன்றி தெரிவித்து, குஜராத் மக்கள் எழுதிய, 5.5 லட்சம் கடிதங்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். மத்திய பா.ஜ., அரசால் கொண்டு வரப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. தக்க பதிலடிகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும்,
AmitShah,CAA,CAB,NRC,CitizenshipAmendmentBill,அமித்ஷா,சிஏஏ, குடியுரிமை

ஆமதாபாத் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு, நன்றி தெரிவித்து, குஜராத் மக்கள் எழுதிய, 5.5 லட்சம் கடிதங்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.

மத்திய பா.ஜ., அரசால் கொண்டு வரப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. தக்க பதிலடிகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், இயக்கங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடைபெற்ற, குடியுரிமை திருத்தச் சட்டத்தை விளக்கும் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷா கலந்து கொண்டார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, மக்கள் எழுதிய, 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை, அமித் ஷா வெளியிட்டார்.

இக்கூட்டத்தில், அமித் ஷா பேசியதாவது: இவை, வெறும் வார்த்தை களால் ஆன கடிதங்கள் அல்ல; மனப்பூர்வமாக மக்கள் நன்றி தெரிவித்து உள்ளதன் சான்று. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பொய்களுக்கு, இந்த கடிதங்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளன. தேர்தல் சமயத்தில் வெளியிடப்பட்ட, தேர்தல் அறிக்கையில், 'குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும்' என, பா.ஜ., வாக்குறுதி அளித்தது.

அப்போது, காங்., வாய் திறக்காதது ஏன்? ராஜஸ்தானில், காங்., ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தானில் இருந்து வரும் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு, குடியுரிமை வழங்கப்படும் என, தேர்தல் நேரத்தில், அம்மாநில காங்., வாக்குறுதி அளித்தது. அடிப்படை உரிமைஆனால், மத்திய பா.ஜ., அரசு, ஹிந்து, சீக்கியர்களுடன், பார்சி, கிறிஸ்துவர்கள் ஆகியோரையும் இணைத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது.

அப்படி இருக்க, காங்., அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பா.ஜ., அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம், பிற நாடுகளில் கொடுமையை அனுபவித்த நம் நாட்டு மக்களுக்கு, இங்கு அடிப்படை உரிமைகள் கிடைத்துள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
17-ஜன-202015:36:07 IST Report Abuse
M.SHANMUGA SUNDARAM 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் 5.5 லட்சம் கடிதங்கள் இமாலய சாதனை.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-202023:53:56 IST Report Abuse
தமிழவேல் 5 .5 லட்ச கடிதத்தையும் உண்மையிலேயே படித்துப் பார்த்தால், அதில் எத்தனை எதிராக வந்தது என்று தெரியும்.
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
13-ஜன-202017:43:05 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை குப்பைகளை கூட காட்சி படுத்திவிட்டனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X