ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : ஜன 13, 2020
Advertisement

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், எல்லை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, அங்கு உள்ள டிரால் பகுதியில், எல்லை பாதுகாப்புப் படையினர், நேற்று அதிகாலை முதல், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கல்ஷன்பூரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.இரு தரப்புக்கும் இடையில் நீடித்த துப்பாக்கி சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X