பொது செய்தி

இந்தியா

விஐபி பாதுகாப்பு பணியில் இனி என்.எஸ்.ஜி., கிடையாது

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (4)
Advertisement
NSG,VIP_security,Government,withdraw,NSGCommando,விஐபி, கமாண்டோ,மத்தியஅரசு,என்எஸ்ஜி

புதுடில்லி : வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை முழுமையாக விலக்கிக் கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும், 13 வகையான, வி.ஐ.பி.,க்களுக்கு, 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும், தலா, 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பு அளிக்கும் பணியில், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு இரண்டாவது முறையாக அமைந்த பின், வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டது. பலருக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது; சிலருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டது.எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு வழங்கி வந்த பாதுகாப்பிலும் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோருக்கான, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. இசட் பிளஸ் பிரிவில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், 1,300 கமாண்டோ வீரர்கள், பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு பணியில், என்.எஸ்.ஜி., வீரர்களை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:என்.எஸ்.ஜி., படைப் பிரிவு, பயங்கரவாதம் மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது. வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதால், இந்தப் படை உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வில்லை. அதனால், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இவர்களை ஈடுபடுத்தும் வகையில், பாதுகாப்பு பணி இனி வழங்கப்படாது.

வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு பணியில், சி.ஆர்.பி.எப்., வீரர்களும், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்படுவர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202013:49:15 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அருமையான முடிவு , நாட்டில் அதிகரித்துவரும் தீவிரவாதத்தை வேரோடு அழிக்க பலமான படை தேவை
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜன-202012:06:54 IST Report Abuse
Lion Drsekar பாதுகாப்பு தேவை என்றால் அரசாங்கத்துக்கு அவரவர்கள் சொந்த பணத்தில் பணம் கட்டினால் கட்டிய தொகைக்கு ஏற்ப வீரர்கள் அனுப்பப்பட்டுடுவார்கள் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே எப்படி பி எஸ் என் எல் போன்ற துறைக்கு மற்ற தனியார்கள் பணம் காட்டுகிறார்களோ அப்படி காட்டினால்தான் அரசாங்கம் நடத்தமுடியும். இப்படி நடந்தால் நாடும் விளங்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
mukundan - chennai,இந்தியா
13-ஜன-202010:32:42 IST Report Abuse
mukundan மிக நல்ல முடிவு.... மக்கள் காப்பாற்றும் வேலைகளை இவர்கள் செய்யட்டும். அரசியல்வியாதிகளை அவர்களின் தொண்டர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X