பாக்.,கில் சிறுபான்மையினருக்கு நடக்கும் கொடுமை அம்பலம்! குடியுரிமை சட்டம் குறித்து பிரதமர் மோடி விளக்கம்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
பாக்., சிறுபான்மை, அம்பலம், குடியுரிமை சட்டம்

கோல்கட்டா: ''குடியுரிமை திருத்த சட்டம், யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக கொண்டு வரப்பட்டதல்ல; குடியுரிமை அளிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. இதை எதிர்க்கட்சியினர் தவறாக பிரசாரம் செய்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தால் தான், பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினர், எந்த அளவுக்கு துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பது, சர்வதேச சமுதாயத்துக்கு தெரியவந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா துறைமுகத்தின், 150வது ஆண்டு விழா, தேசிய இளைஞர் தின விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக, நேற்று முன்தினம் கோல்கட்டா வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஹவுராவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பேளூர் மடத்தில் தங்கினார். நேற்று, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள், தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மடத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் சிலைகளுக்கு, மோடி மரியாதை செலுத்தினார்.


பயப்படக்கூடாது:

மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: இந்த மடத்துக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இப்போது மட்டுமல்ல, குஜராத் முதல்வராக இருந்தபோதும், இங்கு பலமுறை வந்து தங்கியுள்ளேன். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள், தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் தான், எதிர்காலத்தை வழி நடத்தப் போகின்றனர். நம் இளைஞர்களிடம், நம் நாடு மட்டுமல்ல; உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் ரொம்பவே எதிர்பார்ப்பு வைத்துள்ளன. சவால்களை பார்த்து, இளைஞர்கள் பயப்படக் கூடாது. சவால்களை முறியடித்து வெற்றி காண வேண்டும்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, பல முறை விளக்கி விட்டோம். ஆனால், இந்த விளக்கத்தை கேட்க, எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. இந்த விஷயத்தில், குறிப்பிட்ட தரப்பினரை, எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன. குடியுரிமை திருத்த சட்டம் என்பது, நம் அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக வசித்து, பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகி, அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்காக அமல் படுத்தப்பட்டது; யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அமல்படுத்தப்பட்ட சட்டம் அல்ல இது.

இன்று, தேசிய இளைஞர் தின விழா. இந்த நாளில், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். இந்த சட்டம், ஒரே நாள் இரவில் அமல்படுத்தப்படவில்லை. நம் நாட்டின் மீதும், நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளவர்கள், உலகின் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், உரிய சட்ட நடைமுறைப்படி, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்; அதில் எந்த பிரச்னையும் இல்லை.


காந்தி விருப்பம்:

அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக வசித்து, துன்புறுத்தலுக்கு ஆளாகி, அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்று தான், மகாத்மா காந்தி விரும்பினார். அவர் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்களின் விருப்பத்தை தான், மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டாமா... அதற்கான பொறுப்பு, கடமை நமக்கு உள்ளது. அகதிகளாக வந்தவர்களை, இறந்து போங்க என்றா கூற முடியும்?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, வட கிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் போராட்டங்கள் நடக்கின்றன. இந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த மாநிலங்களில் கலாசாரம், அடையாளம், புவியியல் அமைப்பு ஆகியவை பாதுகாக்கப்படும். குடியுரிமை திருத்த சட்டத்தால், எந்த வகையிலும், இந்த மாநில மக்களின் நலனுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக உரிய விளக்கம் அளித்தும், எதிர்க்கட்சிகள், இந்த விஷயத்தில் வதந்திகளை பரப்பி வருகின்றன. நாம் அமல்படுத்தியுள்ள இந்த சட்டத்தால், சர்வதேச நாடுகளில் பெரும் விவாதம் நடக்கின்றன. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினராக வசிப்பவர்கள், 70 ஆண்டுகளாக எந்த அளவுக்கு துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது, சர்வதேச நாடுகளுக்கு தற்போது தான் தெரியவந்துள்ளது. இளைஞர்களுக்கு இது பற்றி புரிந்தாலும், சிலர், அவர்களை தவறாக வழி நடத்துகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு முன், நம் நாட்டு இளைஞர்களிடையே, ஒருவித ஏமாற்றம் நிலவியது. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.


துறைமுகம் பெயர் மாற்றம்:

கோல்கட்டா துறைமுக பொறுப்பு கழகத்தின், 150வது ஆண்டு விழாவில் பங்கேற்ற, பிரதமர் மோடி, துறைமுகத்துக்கு, ஷ்யாம பிரசாத் முகர்ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஷ்யாம பிரசாத் முகர்ஜி, பா.ஜ.,வின் தாய் அமைப்பான, பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனராக இருந்தவர்.

இந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இங்குள்ள ஏழை மக்கள், தலித் ஆகியோரின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு திட்டம் தீட்டியும், அதை செயல்படுத்த முடியவில்லை.

மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மாநில அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், மாநில அரசுக்கு ஆர்வம் இல்லை. மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள், சம்பந்தப்பட்ட மக்களுக்கு நேரடியாக கிடைக்கின்றன. இதில், இடைத்தரகர் யாரும் இல்லை. சிண்டிகேட் இல்லை. மக்களின் பணத்தை இடையில் உள்ளவர்கள் சுரண்ட முடியாது. ஆனால், இப்படிப்பட்ட திட்டங்களுக்கு தான், மாநில அரசு இடையூறு ஏற்படுத்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தொடரும் போராட்டம்!

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள், கோல்கட்டாவின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்களை நடத்தினர். மோடியின் வருகைக்கு எதிரான பதாகைகளை துாக்கி பிடித்தபடியும், கோஷமிட்டபடியும், பலர் போராட்டங்களில் பங்கேற்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை, மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக, அவர்கள் அறிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
13-ஜன-202009:36:27 IST Report Abuse
GMM குடியுரிமை வழங்கும் சட்டம் திருத்தம் என்றால் எதிர் கட்சி புரிந்து கொள்ளும். அண்டை நாட்டு சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க துவங்க வேண்டும். சட்டம் சரியாகத்தான் உள்ளது. நேப்பாளி கள் இந்தியா வர, இந்தியர்கள் நேபாளம் செல்ல பாஸ்போர்ட், விசா வேண்டாம். எல்லையில் இரு நாட்டு சோதனை சாவடி மட்டும் இருக்கும். அண்டை இஸ்லாமிய நாட்டுக்கு செல்ல/வர பாஸ்போர்ட், விசா வேண்டும். அண்டை நாட்டு சிறுபான்மை மக்கள் அகதிகள். இந்தியா அடைக்கலம் கொடுக்க வேண்டும். ஆனால்,மதம் சார்ந்த அண்டை இஸ்லாமிய நாடுகளில் (pak..) இஸ்லாமியர் மட்டும் ஆட்சி புரிய முடியும். இஸ்லாம் மக்களுக்கு உரிமைகள் இருக்கும். இந்தியா வந்தால் அவர்கள் அகதிகள் அல்ல . ஊடுருவல்காரர்கள். நோக்கம் அறிய முடியாது. ஆகவே தான் சட்டத்தில் சேர்க்க வில்லை. பாகுபாடு கிடையாது. எதிர் கட்சிகள் சரியான காரணம் இன்னும் சொல்லவில்லை.
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
13-ஜன-202007:49:03 IST Report Abuse
svs //....எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் அதில் எந்த பிரச்னையும் இல்லை......//......யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற போது அதுதான் சட்டம் என்று சொல்ல வேண்டியதுதானே... ஹிந்துக்களுக்கு கொடுப்பதை இங்கு யாராவது எதிர்க்கிறார்களா ??.......இந்த CAA சட்டத்தை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கலாம் ....அது தெரிந்தே என் இந்த சட்டம் ??......இந்த பிரச்சனை உள்ள அசாம் மாநில மக்களுக்கு இந்த சட்டம் உதவவில்லை ..பிறகு எதற்கு இந்த சட்டம்? ....மத சார்பின்மை என்று கூறி கொண்டு உலகம் முழுக்க மதத்தை பரப்பும் நாடுகள் கூட இந்த சட்டத்தை ஆதரிக்கவில்லை .....முதலில் NRC , NPR அமுல்படுத்துங்கள் ....இப்பொது அதுவும் போய் விட்டது .... தீவிரவாதம் வளர்வதற்கு காரணம் இங்குள்ள ஊழல் மற்றும் ஆமை வேக நீதிமன்றங்கள் ....நல்ல பொருளாதாரம் இல்லாமல் நாடு இல்லை ....ஆயுதம் வாங்க கூட காசில்லாத நிலைமை ...அப்புறம் தீவிரவாதத்தை எப்படி ஒடுக்குவது ??....பங்களாதேஷில் பிறந்த ஒருவரின் ஆயுட் காலம் 72 வயது ....இந்தியாவில் அது 68 ...சீனாவில் 76 ....இலங்கையில் 75 .....இதில் இந்தியா ஹிந்து மதத்தை எப்படி பாதுகாக்கும் ??.....
Rate this:
sriram - Chennai,இந்தியா
13-ஜன-202015:21:48 IST Report Abuse
sriramஇந்த சட்டத்தை படிக்காமல் அல்லது புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடித்து கொண்டு போடப்பட்டுள்ள கமெண்ட் இது. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இந்தியில் யார் வேண்டுமானாலும் குடி உரிமைக்கு விண்ணப்பிக்கல. "Foreigners Act" என்ற சட்டம் இதற்கு வழி செய்கிறது. இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தம் ஒரு "limited Amendment". அதாவது ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுக்காக செய்யப்பட்டுள்ளது. அது என்னவென்றால் 1950 இல் நேரு-லியாகத் ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் சிறுபான்மையினரை பாதுகாக்க ஒப்பு கொண்டது. அனால் மத காரணங்களால் பாகிஸதானிலும் பங்களாதேஷிலும் அவர்கள் கொடுமை படுத்துவது தெளிவாக உள்ளது. ஓன்றுபட்ட இந்தியாவின் பிரஜையாக இருப்பவர் மதம் காரணமாக கொடுமை படுத்தப்பட்டால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தியா கடமைப்படவில்லையா? அதற்காகத்தான் இந்த சட்ட திருத்தம். மற்ற முஸ்லிம்கள் பொருளாதார காரணங்களுக்கு வருகிறார்க்க்கள். அவர்கள் "Foreigners Act" மூலம் குடியுரிமை பெறலாம். அதற்க்காக அவர்கள் காக்க வேண்டி உள்ளது. அனால் மதம் சம்பந்தமாக அகதியாக வருபவர்கள் காப்பது கடினம் (பாகிஸ்தானில் ஹிந்து மற்றும் சீக்கிய பெண்கள் கடத்தப்படுவது குறித்து google செய்து பார்க்கவும்). எனவே தான் அவர்களுக்கு முன்னுரிமை....
Rate this:
Cancel
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
13-ஜன-202006:03:06 IST Report Abuse
k balakumaran இசுலாமிய நாடுகள் சிறுபான்மை வேற்று மதம் பின் பற்றுபவரை கேவலப்படுத்துவது உண்மை. ஸ்ரீலங்காவில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம்கள் இந்து கோவில்களை இடித்து காணி அகற்றுவதும், கோவில் வளாகம், பசுவை தெய்வம் ஆக வழிபடும் இந்துக்கள் வீடுகள் முன் நள்ளிரவில் மாட்டு இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதும் இந்துக்களை படுகொலை செய்வோம் என்று மிரட்டி ஓட வைத்து காணிகளை அபகரித்து தனி முஸ்லீம் பிரதேசம் ஆக்குவதும் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு சிறுபான்மை ஆக இருந்து கொண்டே இவ்வளவு செய்பவர்கள் முஸ்லீம் நாடு ஆக இருந்தால் எவ்வளவு கொடுமை செய்வார்கள் என்பதற்கே இந்த உதாரணம். இவற்றுக்கு தூபம் போடுவது, நிதி உதவி செய்வது எல்லாம் முஸ்லீம் நாடுகள் தான். இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை குடியுரிமை திருத்த சட்டம். அதற்கு துருக்கி, மலேஷியா, பாகிஸ்தான் என்று எல்லோரும் கிளம்புகிறார்கள். அப்போ நீங்க மத தீவிரவாதிகளை வைத்து எதையும் செய்யலாம் நாம் அடங்கி போகணுமா?? இந்துக்கள் புரிந்து கொண்டால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X