தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் கருகும் பயிர்களை காப்பாற்ற| Dinamalar

தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் கருகும் பயிர்களை காப்பாற்ற

Added : ஜன 13, 2020

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி நெல் பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

இத்தாலுகாவில் தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம் உள்பட எட்டுக்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீர்வர வழியில்லை. மழை பெய்தால் மட்டும் கண்மாய்கள் நிரம்பும். 2010ல் பெய்த மழையால் இக்கண்மாய்கள் மறுகால் பாய்ந்தன. அதன்பின் வறண்டுள்ளன.இப்பகுதி கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர்உள்ள விவசாயிகள் மட்டும் நெல் நடவு செய்கின்றனர். மற்றவர்கள்,காய்கறிகள், சோளம் விதைக்கின்றனர்.

இந்தாண்டு நல்ல மழை பெய்து, கண்மாய்நிரம்பும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் நெல் நடவு செய்தனர். கண்மாய்க்கு தண்ணீர் வராததால் பலரது நாற்றுக்கள் கருகின.அதில் தப்பிய பயிர்கள் அறுவடை நிலையில் உள்ளன. கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் நெல் பயிர்கள் கருகும் நிலையுள்ளது. பலர் அருகிலுள்ள கிணறுகளில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி நெல் பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X