பொது செய்தி

இந்தியா

அமைச்சகங்களுக்கு புதிய கட்டடம்: விபரம் கேட்கிறது மத்திய அரசு

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
parliament,new_building,பார்லிமென்ட்,Parliament_of_India,மத்திய_அமைச்சரவை

புதுடில்லி : பார்லிமென்ட் புதிய கட்டடம் அமையவுள்ள இடத்திலேயே, அனைத்து அமைச்சகங்களின் அலுவலகங்களும் அமையவுள்ளதை அடுத்து, ஒவ்வொரு அமைச்சகங்களிலும் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்ற விபரத்தை அறிக்கையாக அளிக்கும்படி, மத்திய அமைச்சரவை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

நம் பார்லிமென்ட் கட்டடம், மிகவும் பழமையானது. தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப, நவீன வசதிகளுடன் கூடியதாக, பார்லிமென்டிற்கு புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வளாகத்திலேயே, அனைத்து அமைச்சகங்களின் அலுவலகங்களையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, டில்லியின், லுாட்டின்ஸ் பகுதியில் உள்ள பழமையான, கிருஷி பவன், சாஸ்திரி பவன், விஞ்ஞான் பவன், துணை ஜனாதிபதி இல்லம், நிர்மான் பவன் ஆகியவை இடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

தற்போதைய பார்லிமென்ட் அமைந்துள்ள இடத்துக்கு அருகிலேயே, உயர்ந்த கோபுரங்களுடன் கூடிய முக்கோண அமைப்பிலான கம்பீரமான தோற்றத்தில், புதிய பார்லிமென்ட் கட்டடம் அமையவுள்ளது.அமைச்சகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இடவசதி செய்யப்பட உள்ளது. இதற்காக, ஒவ்வொரு அமைச்சகங்களிலும் பணியாற்றுவோர் எண்ணிக்கை குறித்த தகவல்களை அளிக்கும்படி, சம்பந்தபட்ட அமைச்சக செயலர்களுக்கு, மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் குப்தா உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்களை, வரும், 15ம் தேதிக்குள் அளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
13-ஜன-202006:46:42 IST Report Abuse
blocked user நவீனத்தை அரவணைத்து சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X