பொது செய்தி

தமிழ்நாடு

பிறருக்கு உதவுவதே வாழ்க்கை: சுவாமி சிவயோகானந்தா பேச்சு

Added : ஜன 13, 2020
Advertisement
 பிறருக்கு உதவுவதே வாழ்க்கை: சுவாமி சிவயோகானந்தா பேச்சு

மதுரை:''சேர்த்த செல்வத்தை பிரதிபலன், புண்ணியம்பாராமல் பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும். இதன் மூலம் சமுதாயம் உயர்ந்த நிலையை அடையும்,'' என, மதுரை சின்மயா சேவா டிரஸ்ட் சார்பில் தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் விழாவில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.

டிரஸ்ட் செயலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பொருட்களை வழங்கி சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது:சேர்த்த செல்வத்தை பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இல்லை. அதிகம் சேர்த்த செல்வத்தை தனக்காக மட்டும் வைக்காமல் நல்லவர்களுக்கு வழங்க வேண்டும்.

யார் ஒருவர் பிறருக்காக வாழ்கிறாரோ அது தான் உண்மையான வாழ்க்கை; பிறருக்காக வாழாதவர் இறந்தவருக்கு சமம், என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். தெய்வ நம்பிக்கையை ஒரு போதும் விடக்கூடாது. நேரடியாக பார்க்கும் ஒரே கடவுள் சூரியன். உடல் ஆரோக்கியம், உணவு வழங்கும் வல்லமை படைத்தவர் சூரியன், என்றார்.

டிரஸ்ட் நிர்வாகி கோபால்சாமி, சமூக ஆர்வலர்கள் வள்ளி, சீனிவாசன், விஜயா, தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் ராஜா, ஜெயராமன், நாகபாஸ்கர் பங்கேற்றனர். ஆர்த்தி தொகுத்து வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X