சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் பூ வியாபாரி பலி

Added : ஜன 13, 2020
Advertisement

பெண்ணாடம்: விருத்தாசலம் அடுத்த பேரளையூர், தெற்கு காலனியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், 45. கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பூ வியாபாரம் செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் வீட்டிற்கு செல்ல விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த டிஎன் 61 இ 9966 என்ற பதிவெண் கொண்ட பைக் மோதியதில் கல்யாணசுந்தரம் படுகாயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X