அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடும்ப பாதுகாவலராக ஸ்டாலின் : அமைச்சர் உதயகுமார் தாக்கு

Added : ஜன 13, 2020
Advertisement

பேரையூர்:''தமிழனத்தின் பாதுகாவலர் என கூறும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்தின் பாதுகாவலராக தான் உள்ளார்,'' என அமைச்சர் உதயகுமார் பேசினார்.

பேரையூர் பகுதிகளில்பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கி அவர் பேசியதாவது: 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதால் உள்ளாட்சிகளில் அதிக பெண்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். எதிர்க்கட்சியினர் அவதூறு பிரசாரம் செய்தனர். மக்கள் கைவிடாமல் எங்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.ஸ்டாலின் தமிழினத்தின்பாதுகாவலர் என்கிறார். ஆனால் அவரது குடும்ப பாதுகாவலராக தான் உள்ளார்.

ஐந்து முறை ஆட்சி செய்த தி.மு.க., முல்லைப் பெரியாறு, காவிரி, கச்சத்தீவு போன்றவற்றில் தமிழினத்திற்கு துரோகங்களை தான் செய்தது.ஜெ., வழியில் காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையில் முதல்வர் தீர்வு கண்டுள்ளார். கச்சத்தீவை மீட்க சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். தமிழினத்திற்கு பாதுகாப்பு அரணாக முதல்வர் உள்ளார். நாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளார், என்றார். கலெக்டர் வினய் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X