பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையையொட்டி சுகாதார திருவிழா

Added : ஜன 13, 2020
Advertisement
 பொங்கல் பண்டிகையையொட்டி சுகாதார திருவிழா

மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி, ஊரே சேர்ந்து கொண்டாடிய, சுகாதார திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது.
மதுராந்தகம் அடுத்த, கருங்குழி பேரூராட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி, அப்பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தலைமையில், சுகாதார திருவிழா நடந்தது.இதில், மேலவளம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கருங்குழியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், கற்பக வினாயகா பொறியில் கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்று சுகாதாரம் குறித்து நாடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம், துாய்மை பாரத இயக்கம், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவை குறித்தும், அப்பகுதி வாசிகள் அறிந்துக் கொள்ளும் வகையில், பாடல்கள் மற்றும் பேச்சுப் போட்டிகள் மூலம் மாணவ - மாணவியரால், விளக்கப்பட்டது.நாணய கண்காட்சி, கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியடி, பரத நாட்டியம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும், இவ்விழாவின் போது நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X