பொது செய்தி

தமிழ்நாடு

வஸ்திரம் வழங்கும் விழா

Added : ஜன 13, 2020
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ருத்ரகோட்டீஸ்வரர் கோவிலில், உழவாரப் பணி செய்த, சிவ பக்தர்களுக்கு வஸ்திரம் வழங்கும் விழா நடந்தது.காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், பதுப்பாளையம் தெருவில், ருத்ரகோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆருத்ரா தரிசனத்தின்போது, சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள் பலர், உழவாரப் பணி மேற்கொண்டனர். உழவாரப் பணி செய்த பக்தர்களுக்கு, வேட்டி, துண்டு உள்ளிட்ட வஸ்திரம் வழங்கப்பட்டது.
கூடாரவல்லி உற்சவம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், மார்கழி கூடாரவல்லி உற்சவம் கண்டார்.இக்கோவில், பக்த பஜனை குழுவினர், மக்கள் நலன் வேண்டி, மார்கழி மாதத்தில், தினம் காலை, பஜனை பாடுவர். கோவிலிலிருந்து, ஆண்டாள் திருப்பாவை பாடல்களை, மேள, மிருதங்க இசையுடன் பாடி, வீதியுலா சென்று, கோவிலை அடைவர்.மார்கழி மாதம், 27ம் நாளான நேற்று, பஜனை உலாவைத் தொடர்ந்து, கோவில் வாயிலில், அலங்கார கிருஷ்ணர் எழுந்தருளி, கோலாட்டத்துடன், கூடாரவல்லி உற்சவம் நடந்தது. பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.மார்கழி இசை விழாகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், நாளை, மார்கழி இசை விழா நடைபெற உள்ளதாக, கலை பண்பாட்டு துறை தெரிவித்துள்ளது.காலை, 8:30 மணிக்கு, மங்கல இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. இதைத் தொடர்ந்து, தேவார இன்னிசை, கிராமிய பக்தி பாடல்கள் நிகழ்ச்சி, குரலிசை என தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இரவு, 8:00 மணிக்கு, பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருளர்களுக்கு உதவி
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த, காயரம்பேடு கிராமம், தமிழ்ச்செல்வி நகரில், 21 குடிசை வீடுகளில், இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம், இங்குள்ள ஒரு குடிசை வீட்டில், திடீரென தீப்பிடித்து, பின், அடுத்தடுத்த குடிசைகளுக்கும், தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. இதில், குடிசை வீடுகள் அனைத்தும் முழுமையாக எரிந்ததால், வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் துணிகள் எரிந்தன.அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க., சார்பில், காட்டங்கொளத்துார் ஒன்றிய செயலர் கவுஸ்பாஷா, காயரம்பேடு கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் திருவாக்கு ஆகியோர், இருளர் இன மக்களுக்கு, அரிசி, துணிகள் உள்ளிட்ட பொருட்களை, நேற்று, வழங்கினர்.
மாணவியருக்கு பயிற்சி
திருத்தணி: திருத்தணி ஜி.ஆர்.டி., செவிலியர்கல்லுாரியில், இளைஞர்கள் தினம் மற்றும் விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரையாற்றி, 125 ஆண்டுகள் நிறைவையொட்டி, தன்னம்பிக்கை பயிற்சி, கல்லூரி முதல்வர் பத்மாவதி தலைமையில் நடந்தது.இதில், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் கோகுல்ராஜ் பங்கேற்று, தன்னம்பிக்கை குறித்து, 125 கல்லுாரி மாணவியருக்கு, 125 நிமிடங்கள் தொடர்ந்து பேசி பயிற்சி அளித்தார்.மேலும், விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு,நேர நிர்வாகம், கருத்துகள், கொள்கைகள் குறித்தும் விளக்கினர்.பயிற்சியில் பங்கேற்ற, 125 மாணவர்களுக்கு, விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X