பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய தம்பதிக்கு உதவிய எம்.எல்.ஏ.,

Added : ஜன 13, 2020
Advertisement

சிதம்பரம்: சிதம்பரம் அருகே, விபத்தில் காயமடைந்தவரை மீட்டு, எம்.எல்.ஏ., பாண்டியன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த தெம்மூரை சேர்ந்தவர் மணி, 65; நேற்று மாலை காட்டுமன்னார்கோவிலில் இருந்து மனைவியுடன் காரில் சிதம்பரம் நோக்கி வந்தார். சிதம்பரம் புறவழிச்சாலையை கடக்க முயன்றபோது, சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ், மணியின் கார் மீது மோதியது. இந்த விபத்தில், மணியும் அவரது மனைவியும் காயமடைந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், காரில் இருந்து இறங்கி காயமடைந்தவர்களை மீட்டு, தண்ணீர் கொடுத்தார். உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். எம்.எல்.ஏ., வின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X