சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் 3 பேர் மாயம்

Added : ஜன 13, 2020
Advertisement

கடலுார்: கடலுார் நகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்த 3 மாணவர்களை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.கடலுார் ,புதுப்பாளையம், சுப்ரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது சாலி,40: இவரது மகன் ராஜாமுகமது.15: புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜகுரு,15: கடலுார் கே.கே.நகரைச் சேர்ந்த ராஜன் மகன் சதீஷ்குமார்,15: இவர்கள் மூன்று பேரும் கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.இவர்கள் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு, மீண்டும் பள்ளிக்கு சென்றுள்ளனர். இரவு நீண்ட நேரமாகியும் மாணவர்கள் வீட்டிற்கு செல்லாததால் அவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களை, உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலுக்கு கிடைக்கவில்லை.இது குறித்து முகமதுசாலி கொடுத்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான 3 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X