பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சியில் பெண்கள் ஆதிக்கம் 'கணித்த' சிவன்மலை ஆண்டவர்

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement

காங்கேயம் : உள்ளாட்சியில் பெண்கள் ஆதிக்கம் பெறுவர் என்பதை, சிவன்மலை ஆண்டவர், ௭௦ நாட்களுக்கு முன்பே கணித்து விட்டதாக, பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் முருக பெருமான் தோன்றி, உத்தரவிடும் பொருள் பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும்.இந்த பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டியே கணிப்பதாக அமையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. துப்பாக்கி தோட்டா வைத்தபோது, கார்கில் போர் நிகழ்ந்தது. தண்ணீர் வைத்தபோது சுனாமி ஏற்பட்டது போன்றவை, நுாற்றுக்கணக்கான உதாரணங்களில் சில.

கடந்த, ௨019 அக்.,30 முதல் உத்தரவு பெட்டியில், ஐம்பொன் மகாலட்சுமி சிலை வைக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் குறித்து, பக்தர்கள் யூகித்து வந்தனர். இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தலில், பெண்கள் அதிக அளவில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். 'மகாலட்சுமி, பெண்களின் அம்சம்; எனவே உள்ளாட்சியில் பெண்கள் ஆதிக்கம் பெறுவதை, சிவன்மலை ஆண்டவர் முன்பே கணித்துள்ளார்' என்றும் பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
13-ஜன-202006:51:25 IST Report Abuse
RADE ஒரு பெண் பொம்மை வைத்து இருந்தால் கூட ஒரு விதத்தில் உள்ளாட்சி தேர்தல் வெற்றி கணிப்பு சரி என்று சொல்லலாம், ஆனால் தற்பொழுது நம் நாடு இருக்கும் சூழ் நிலையில் மஹாலக்ஷ்மி சிலை வைத்ததுக்கு பொருளாதார மந்தம் தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. நிதி அமைச்சர் கூட பெண் தான், பல பெயர்க்கு பலவாறு தோன்றினாலும் முருகன் சுட்டி காட்டுவதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X