அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரும், 14ல் விடுமுறை ராமதாஸ் வலியுறுத்தல்

Added : ஜன 13, 2020
Share
Advertisement

சென்னை : 'மாணவர்கள், பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல, வரும், 14ம் தேதியும் விடுமுறை வழங்க, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:'தமிழகத்தில், போகி பண்டிகையான, நாளை வரை பள்ளிகள், கல்லுாரிகள் செயல்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர், பொங்கலை கொண்டாட, சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்.எனவே, போகியை கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாகவும், 14ம் தேதியான நாளையும், விடுமுறை வழங்க, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X