சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., கொலை வழக்கு விசாரணை தீவிரம்

Added : ஜன 13, 2020
Advertisement

நாகர்கோவில் : எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், தமிழக போலீசாரின் விசாரணை, தீவிரம் அடைந்துள்ளது.

கேரளாவில் பலர், போலீசாரின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில், எஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக்கை பிடிக்க, தமிழகத்தில், 10, கேரளாவில் மூன்று என, 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் போலீசார் கவனம் செலுத்தினாலும், கேரளாவில் தான் விசாரணை முழு வீச்சில் நடக்கிறது. பெரும்பாலான தனிப்படைகளும், கேரளாவில் தான் முகாமிட்டுள்ளன. அவர்களுக்கு, கேரள போலீசார் உதவுகின்றனர்.

கொலைக்கு முன்னும், பின்னும், கொலையாளிகளிடம் அலைபேசியில் பேசியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 100 பேர், போலீசாரின் விசாரணைக்குள் வந்துள்ளனர். அதில், அப்துல் சமீம் அதிகம் பேரிடம் பேசியது தெரியவந்துள்ளது.திருவனந்தபுரத்தில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரிலும், அதன் உரிமையாளரான பெண் வீட்டிலும், தனிப்படை போலீசார் சோதனை நடத்தி, 'ஹார்டு டிஸ்க்' உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அந்த பெண், குற்றவாளிகளில் ஒருவரின் மனைவி எனக் கூறப்படுகிறது.

கேரளாவில் இஞ்சிவிளையைச் சேர்ந்த தாசிம், சித்திக் ஆகியோரை, கேரள தனிப்படை போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, ஒரு கி.மீ.,யில் இஞ்சிவிளை உள்ளது.கேரளாவில் நடக்கும் விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளுக்கு நெருக்கமான சிலர், விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.இது தவிர, தக்கலையில் ஒன்பது, தென்காசியில் நான்கு, பாறசாலையில் இருவர் என, 15 பேரிடம் விசாரணை நடக்கிறது. இவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களின் அலைபேசி எண்களின் அடிப்படையில், 100 பேர், போலீசின் கண்காணிப்பில் வந்துள்ளனர்.கொலையாளிகள் இருவர் உட்பட, 16 பேர் கொண்ட புதிய பயங்கரவாத அமைப்பு, கொலையின் பின்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டு, விசாரணை நடக்கிறது.சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிப்புஎஸ்.ஐ., வில்சன் கொலை சம்பவத்தை தொடர்ந்து, சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு நெருங்கி வரும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க, கூடுதல் உளவுப்பிரிவு போலீசார் நிலக்கல், பம்பை, சன்னிதானம், மற்றும் பத்தணந்திட்டை முதல் பம்பை வரை உள்ள முக்கிய இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.பக்தர்களுக்கு சிரமம் தராமல் சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக, பத்தணந்திட்டை எஸ்.பி., ஜெயதேவ் தெரிவித்துள்ளார்.

குமரிக்கு மேலும் ஒரு எஸ்.பி.,தனிப்படையின் செயல்பாட்டை மேலும் வேகப்படுத்தும் வகையில், குமரி, எஸ்.பி., ஸ்ரீநாத் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, குமரி மாவட்ட சட்டம் - ஒழுங்கை கவனிக்க, மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக இருந்த ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநாத், பயங்கரவாதிகளை பிடிக்கும் தனிப்படையின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X