அரசியல் செய்தி

தமிழ்நாடு

வில்சன் மரணத்திலும் அரசியலா?

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : 'சுட்டுக் கொல்லப்பட்ட, சிறப்பு எஸ்.ஐ., வில்சன் மரணத்திலும், அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார்' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சிறப்பு எஸ்.ஜ., வில்சன் கொலை வழக்கில், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தனிப்படைகள் அமைத்து, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது; குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'டுவிட்டர்' பக்கத்தில், 'போலீஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை: இதில் தான், தமிழகம் முதலிடம்' என, பதிவிட்டுள்ளார். சிறப்பு எஸ்.ஐ., மரணத்திலும், அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அவர் செயல்படுகிறார்.யார் ஆட்சியில், போலீஸ் துறையினருக்கு நல்லது நடக்கிறது;

யார் ஆட்சியில், போலீஸ் துறையினர் கண்டு கொள்ளப்படவில்லை என்பது, போலீஸ் துறையினருக்கும், தமிழக மக்களுக்கும் நன்கு தெரியும். அதுபற்றி ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டிய அவசியமில்லை.தி.மு.க., ஆட்சியில், தென்காசி - அம்பாசமுத்திரம் சாலையில், எஸ்.ஐ., வெற்றிவேல் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்.மதுரை மத்திய சிறையில் பணி புரிந்து வந்த ஜெயிலர் ஜெயப்பிரகாஷ், அலுவலகம் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப் பட்டார்.சென்னை மத்திய சிறையில், சிறைத்துறை துணை அதிகாரி ஜெயக்குமார் கொல்லப் பட்டார். இவ்வாறு, தி.மு.க., ஆட்சியின் போது, போலீஸ் துறையினர் பட்ட இன்னல்களைப் பற்றி, ஏராளமான உதாரணங்களை கூறலாம்.இவ்வாறு, ஜெயகுமார் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
13-ஜன-202015:14:34 IST Report Abuse
s.rajagopalan பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் ...அதான் ...பிணத்தை வைத்து அரசியல் ... ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறியவர்கள் என்பது எழுதத்தறிவில்லாத க்ராமத்துக்கரனுக்கு கூட தெரியும். எடுபடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X