சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மேஸ்திரி பலி

Added : ஜன 13, 2020
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, பாலுசெட்டிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 49; கட்டட மேஸ்திரி. நேற்று முன்தினம் இரவு, ஹீரோ இருசக்கர வாகனத்தில் திருப்புட்குழிக்கு சென்றார்.அப்போது, வேலுாரில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இந்த விபத்தில், ஏழுமலை பலத்த காயம் அடைந்தார். பின், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, இரவு, 10:00 மணிக்கு இறந்தார். இது குறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இருவர் தற்கொலை
கருநீலம்: மறைமலைநகர் அடுத்த, கருநீலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மனைவி நதியா, 30. இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால், மனமுடைந்த அவர், நேற்று, விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நதியா இறந்தார். இதுகுறித்து, மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, கூடப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் முத்துகுமார், 37. இவருக்கு, லட்சுமி, 34, என்ற மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.கூலித்தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்தால் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், இவரது மனைவி லட்சுமி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.கடந்த 9ம் தேதி, குடி போதையில் வீட்டிற்கு வந்த முத்துகுமார், மனைவி மற்றும் மகன்கள் பிரிந்த ஏக்கத்தில், வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, வெள்ளவேடு போலீசில், லட்சுமி அளித்த புகாரையடுத்து, போலீசார் முத்துகுமாரின் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
மயங்கி விழுந்து பெண் மரணம்வில்லியம்பாக்கம்: செங்கல்பட்டு அடுத்த, வில்லியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுணன் மனைவி கிருஷ்ணவேணி, 51. இவர், நேற்று, வீட்டின் அருகில் சென்றபோது, மயங்கி விழுந்தார்.இதில், படுகாயமடைந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, கிருஷ்ணவேணி இறந்தார். இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜே.சி.பி., பறிமுதல்
கும்மிடிப்பூண்டி: அரசு புறம்போக்கு நிலத்தல்,கிராவல் மண் கடத்திய டிராக்டர் மற்றும் ஜே.சி.பி.,யை, போலீசார் பறிமுதல் செய்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே, கோபால்ரெட்டிகண்டிகை கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில், சிலர் அத்துமீறி, ஜே.சி.பி., வைத்து, டிராக்டரில் கிராவல் மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.பாதிரிவேடு போலீசார், அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும், கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தப்பி சென்றனர். அவர்கள் விட்டு சென்ற ஜே.சி.பி., மற்றும் டிராக்டரை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X