பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு நெரிசலை தவிர்க்க பூந்தமல்லியில் தற்காலிக பஸ் நிலையம்

Added : ஜன 13, 2020
Advertisement

காஞ்சிபுரம்:பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து, பூந்தமல்லி வழியாக, வெளியூர் செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் என, அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், பல வழித்தடங்களில், 800க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பொங்கல் பண்டிகைக்காக, திருச்சி, சென்னை, விழுப்புரம், திண்டிவனம், பெங்களூரு, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு, காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், கூடுதலாக, 234 சிறப்பு பஸ்கள், நேற்று முதல் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, பூந்தமல்லி வழியாக, காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலுார், திருப்பத்துார், ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து, நேற்று முதல் இயக்கப்படுகின்றன.இந்த தற்காலிக மாற்றம், நாளை வரை செயல்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X