சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராமத்தில் புகுந்த யானை குட்டி மயக்க ஊசியில் மடங்கியது

Added : ஜன 13, 2020
Advertisement

ஓசூர் : ஓசூர் அருகே கிராமங்களுக்குள் புகுந்து சேட்டை செய்த யானை குட்டியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 60க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு காப்புக் காட்டில் முகாமிட்டிருந்தன. இதில் தலா 30 யானைகள் தனியாக பிரிந்து சானமாவு மற்றும் போடூர்பள்ளம் வனப் பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளன.நேற்று அதிகாலை சானமாவு யானைகள் கூட்டத்தில் இருந்து 8 மாத குட்டி தனியாக பிரிந்து பீர்ஜேப்பள்ளி அடுத்த அகரம் கிராமத்துக்கு சென்றது.

அங்கு கால்நடைகள் மற்றும் மக்களை விரட்டி தாக்க முயன்றபோது வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.இதனால் ஓபேபாளையம் கிராமத்துக்குச் சென்ற யானை தீவனப்புல் தக்காளி மிளகாய் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் அங்குமிங்கும் ஓடியபடி இருந்தது.கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் 3:00 மணிக்கு யானை குட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி வலை போட்டு பிடித்தனர். பின் குட்டி யானையின் கண்கள் கட்டப்பட்டு சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு யானைகள் கூட்டத்துடன் சேர்க்க சானமாவு காப்புக் காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

ஏற்றுக் கொள்ளுமா?ராயக்கோட்டை அடுத்த பாவாடரப்பட்டியில் 2018 ஜன. 16ல் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 மாத யானை குட்டியை வனத்துறையினர் மீட்டு கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்தனர். ஆனால் யானைகள் கூட்டம் அந்த குட்டி யானையை தாக்கி கொன்றன. யானையை பிடிக்கும் போது மனித வாசனை அதன் மீது பட்டு விட்டால் அதன்பின் யானைகள் கூட்டம் குட்டியை சேர்ப்பது மிகவும் சிரமம். அதனால் பிடிபடும் குட்டிகள் மீது யானை சாணத்தை தேய்த்து கூட்டத்துடன் சேர்க்க முயற்சிப்பர்.

'நேற்று பிடிபட்ட யானை குட்டி பால் குடிப்பதை நிறுத்தியிருந்ததால் யானைகள் கூட்டத்துடன் சேர்த்து கொள்ளும். பால் குடிப்பதை மறக்கவில்லை என்றால் கூட்டத்துடன் சேர்வது சிரமம்' என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X