பொது செய்தி

தமிழ்நாடு

'ஜிம் - 2' புரிந்துணர்வு ஒப்பந்தம் 60 நிறுவனங்கள் செயல்பட துவங்கின

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னை : இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடான 'ஜிம் - 2'வில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில் 60 நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் வாயிலாக 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தொழில் துவங்க இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறும் தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல் சட்டம் 2018 ஏப்ரலில் நடைமுறைக்கு வந்தது.இதன் வழியாக புதிய தொழில் நிறுவனம் துவங்குதல் ஏற்கனவே உள்ள நிறுவனத்தை விரிவுபடுத்துதல் தடையின்மை சான்றிதழ் அனுமதியை புதுப்பித்தல் போன்ற தொழில் சார்ந்த அனைத்து வசதிகளையும் எளிதாக பெற முடியும். இந்த திட்டத்தில் விண்ணப்பங்களின் நிலுவை விபரங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்ய உள்ளார். \

ஆய்வில் ஒற்றைச் சாளர முறை மற்றும் ஜிம் - 2வில் பெறப்பட்ட முதலீட்டு விபரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.இது குறித்து தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:'ஜிம் - 2' நிலை குறித்தும் ஒற்றைச் சாளர முறை செயல்பாடு குறித்தும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். இதில் பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். ஒற்றைச் சாளர முறையில் அனுமதி கோரிய 15 பெரு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.இவற்றுக்கு இந்த வாரத்திற்குள் அனுமதி வழங்கப்பட்டு விடும்.

இதன் வாயிலாக 6000 கோடி ரூபாய் வரை முதலீடு கிடைப்பதோடு 6000 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.இது போல ஜிம் - 2வில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவரை 60 நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன் வாயிலாக 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். மேலும் 219 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் ஆய்வுக் கூட்டத்தில் விளக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X