பொது செய்தி

தமிழ்நாடு

புழுதியான ஏரி சாலை குன்றத்துார் மக்கள் அவதி

Added : ஜன 13, 2020
Advertisement
 புழுதியான ஏரி சாலை குன்றத்துார் மக்கள் அவதி

குன்றத்துார்:குன்றத்துாரில், நான்குரோடு சந்திப்பில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் சாலை, போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
குன்றத்துாரில், நான்கு ரோடு சந்திப்பில் இருந்து, வெளிவட்ட சாலையை இணைக்கும் சாலை செல்கிறது. இதன் வழியாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கும் செல்லலாம்.டிப்பர் லாரிகள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலை, பல ஆண்டுகளாக போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில், மெகா பள்ளமாக இருந்தது. தொடர்ந்து வாகனங்கள் சென்று வந்ததால், மண் புழுதி அதிகரித்து, லாரிகளை தவிர மற்ற வாகனங்கள் பயன்படுத்தவில்லை.வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று, சில மாதங்களுக்கு முன், இச்சாலை தார்ச்சாலையாக மாற்றப்பட்டது.இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர். ஆனால், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், சாலை மீண்டும் குண்டும் குழியுமாக மாறியது.
லாரிகள் செல்லும் போது, பின்னால் மண் புழுதி அதிகரித்து, மற்ற வாகன ஓட்டிகள், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர். மண் புழுதி மெல்ல மெல்ல நகர்ந்து, வெளிவட்ட சாலையின், அணுகு சாலையிலும் படிந்துள்ளது.இதனால், அப்பகுதி முழுதும், ஒரே புழுதியாக மாறி, பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, அதிக போக்குவரத்து உள்ள இச்சாலையை மீண்டும் சீரமைக்கவும், மண் புழுதியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X