எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை; போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (32)
Advertisement
CAA,CAB,NRC,Opposite_party,எதிர்க்கட்சி,ஆலோசனை

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், டில்லியில் இன்று(ஜன.,13) ஆலோசனை நடத்தவுள்ளன.

மத்திய அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக இது கருதப்பட்டாலும், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர், இந்த கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.


பாதிப்பு ஏற்படாது:


பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக வசித்து, துன்புறுத்தலுக்கு ஆளாகி, அகதிகளாக வந்த, ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட அந்நாட்டு சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமை அளிப்பதற்கான திருத்த சட்டம், சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

'குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 'இந்த சட்டம், குடியுரிமை அளிப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான்; யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல' என, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பலமுறை விளக்கம் அளித்தும், எதிர்க்கட்சியினரின் போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், டில்லியில் இன்று கூட உள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்தியில் உள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் முயற்சியாகவும், இந்த கூட்டம் நடக்கவுள்ளது.






அரசுக்கு நெருக்கடி:


விரைவில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கவுள்ளதால், அதில், மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஒரு இயக்கத்தை துவங்கி, உண்மையான போராட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் நடத்துகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில், இடதுசாரி கட்சிகளும், காங்கிரசும், இந்த போராட்டத்தை வன்முறைக் களமாக பயன்படுத்துகின்றன. எனவே, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதேபோல், பகுஜன் சமாஜ் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதியும், இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில், பச்சிளம் குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பலியாவதற்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா கண்டனம் தெரிவிக்கவில்லை என, மாயாவதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
14-ஜன-202001:23:35 IST Report Abuse
Aarkay தலையே முக்காடு போட்டாயிற்று அடுத்து கதறுங்கள் "அல்லேலூயா அல்லேலூயா" இத்துடன் சுவிசேஷக்கூட்டம் இனிதே நிறைவுற்றது
Rate this:
Share this comment
Cancel
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
13-ஜன-202017:50:57 IST Report Abuse
LovelyMarees போராட்டத்தை தீவிரபடுத்த திட்டம். நாட்டுல அமைதிநிலவ விடமாட்டான்க போல. இப்படியே போனா கூடியசீக்கிரம் இந்திரா ஆட்சியில் கொண்டுவந்த அவசர நிலை பிரகடனம் மாதிரி கொண்டு வந்தாதான் இவன்க அடங்குவான்க. எவனாவது ஒருத்தன் காட்டுங்க முஸ்லிமா நாட்டைவிட்டு துரத்துனத. பின் எதற்கு இப்படி பொய்யான போராட்டம்.
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-202014:42:24 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எதிர்க்கட்சிகள் அல்ல , காங்கிரஸ் கட்சி ஆலோசனை , நாட்டை எப்படியெல்லாம் நாசப்படுத்தலாம் என்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X