சர்வதேச சதுரங்க போட்டிக்கு பதிவு செய்ய இன்று கடைசி | Dinamalar

சர்வதேச சதுரங்க போட்டிக்கு பதிவு செய்ய இன்று கடைசி

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020

சென்னை:சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டியில் பங்கேற்க, வீரர் -- வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி, சோழிங்கநல்லுாரில், 18ம் தேதி துவங்குகிறது. இதில், இருபாலரும் பங்கேற்கும் வகையில், பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டியானது, 25ம் தேதி நிறைவு பெறுகிறது.இதில் வெற்றி பெறுவோருக்கு, மொத்தம், 15 லட்சம் ரூபாய் வரை பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர், பதிவு செய்ய வேண்டும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு சதுரங்க சங்கத்தை அணுகலாம். மேலும், 044 -- 2538 4477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X