தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ,நீக்க ஆர்வம்: சிறப்பு முகாம்களில் 20 ஆயிரம் பேர் மனு

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020
Advertisement
 வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்க்க ,நீக்க  ஆர்வம்: சிறப்பு முகாம்களில்  20 ஆயிரம் பேர் மனு

மதுரை:மதுரை மாவட்டத்தில் இரு நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க ஆர்வத்துடன் விண்ணப்பங்களை தாக்கல் செய்தனர். இம்முகாம்களை தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் ஐ.ஏ.எஸ்., ஆய்வு செய்தார்.

ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. மதுரை மாவட்டத்தில் ஜன., 4, 5ல் ஆயிரத்து 113 இடங்களிலுள்ள ஓட்டுச்சாவடிகளில் நடந்த முகாம்களில் 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

2வது கட்டமாக நேற்றும், நேற்று முன் தினமும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யவும், முகவரி மாற்றமும் ஆர்வமாக விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சரிபார்த்து பெயர் சேர்க்க, நீக்க நடவடிக்கை எடுப்பர்.

மதுரை மாநகராட்சி இளங்கோ பள்ளி, கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி, உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த முகாம்களை தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் ஆய்வு செய்தார். முன்னதாக வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம், ஊர்வலத்தையும் மதுரையில் துவக்கினார். மாநகராட்சி துணை கமிஷனர் நாகஜோதி, ஆர்.டி.ஓ., முருகானந்தம், தாசில்தார் உதயசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X