தமிழ்நாடு

சென்னையில் கேட்பாரற்ற வாகனங்களை அகற்ற கோரிக்கை! மாநகராட்சி, போலீஸ் செயல்படவேண்டும்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (2)
Advertisement
சென்னையில் கேட்பாரற்ற வாகனங்களை அகற்ற  கோரிக்கை! மாநகராட்சி, போலீஸ் செயல்படவேண்டும்

மேற்கு மாம்பலம்:பல மாதங்களாக சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.
சென்னையில் உள்ள சாலையோரங்களில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநகராட்சி மற்றும் போலீசார் இணைந்து வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பல தெருக்களில் இன்னும் பழுதடைந்த வாகனங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
இதில், கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலம் விஸ்வநாதன் தெருவில், லோடு ஆட்டோ மற்றும் கார் ஒன்று பழுதடைந்த நிலையில், பல ஆண்டுகளாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குறுகலான சாலையில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் செல்ல சிரமம் உள்ளது. பகுதிமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த வாகனங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜன-202016:26:04 IST Report Abuse
Lion Drsekar நீதிமன்றம் என்றால் நடுத்தர மக்கள் மட்டுமே பயப்படுவார்கள், மற்றவர்களுக்கு இது ஒரு விளையாட்டு, பழைய மாம்பலத்தில் அப்படியே புது மாம்பலம் வாருங்கள் அதாவது த் நகர் . அதுவும் பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்துக்கு வாருங்கள் , அங்கு காவல் நிலையம் ஆரம்பித்து கண்ணம்மா பேட்டை சுடுகாடு வரை இருக்கும் அனைத்து இடங்களும் வாக்கு வங்கியினர்களுடையது, புதிதாக போடப்பட்ட நடைபாதை முழுவதும் அவர்களுடைய நான்கு சக்கர வாகனங்கள், நடைபாதை நிரம்பி வழிவதால் அதை ஒட்டியே ரோடு முழுவதும் அவர்களுடைய கனரக மற்றும் சரக்கு லாரிகள் ,அடுத்து மற்றொரு புறத்தில் இருக்கும் நடைபாதைகளில் வாகனங்கள் மற்றும் கடைகள் தவிர ரோட்டில் இவர்களது வாரிசுகளின் நான்கு சக்கர வாகனங்கள், மொத்தத்தில் அந்த ரோட்டின் அகலம் 25 அடி மட்டுமே இருக்கிறது. மீதம் முழுவதும் லாரிக்காரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது, இதை யாருமே கேட்கவில்லை, கேட்கவும் முடியாது, கரணம் ஒவ்வொரு வாகனம் நிறுத்தும் இடத்திலும் இவர்களது கட்சி கம்பங்கள் இருக்கிறது நடவடிக்கை எடுத்தால் அந்த அதிகாரிக்கு ஒன்று வேலை போகும் அல்லது மாற்றல் நிச்சயம், ஆக நீதிமன்றம் என்ன செய்ய முடியும், அடுத்து ஒரு புரியாத புதிர். நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகமாகிக்கொண்டே இருக்கும் இந்த நேரத்தில் , நடைபாதைகள் ரோட்டைவிட மிக அதிக அளவில் அகலப்படுத்துவது எதற்க்காக? அங்கும் நடைபாதைக்கு கடைகளுக்காகவா? கடைசியாக நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் முதல் வள்ளுவர் கோட்டம் செல்லும் பாதை மற்றும் கோடம்பாக்கம் செல்லும் சாலை வரை வாக்கு வங்கியினர்களின் எத்தனை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன ? அவர்களின் வரிக்காட்டாத வியாரங்கள் எத்தினை எத்தினை? காய், கனி, சிமிண்ட், கல், மணல், ஜல்லி, தளம் போடும் சாரக்கொம்புகள் ... அவ்வளவு வியாபாரம் , அனைத்து இடங்களும் ஆக்கிரமிப்பு ??? கோடம்பாக்கம் இரயில் நிலையம் முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை புதுப்பேட்டை போல் மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகங்களின் பழுது பார்க்கும் இடம். நடக்க இடம் கிடையாது, மாட்டு வண்டி சர்வசாதாரணாக செல்கிறது, தெருவிக்கு தெரு பசுமாடு நூற்றுக்கணக்கில் நடமாடுகிறது, பகல் மதுரம் மாலை நேரங்களில் மற்றும் அதனுடைய முதலாளியிடம் சென்று பாலை இலவசமாக அவன் எடுத்துக்கொண்டவுடன் மீண்டும் வருவோர் போவோர் கொடுக்கும் தீனிக்காக நடையாய் நடந்து கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் பொது மக்களுக்கு எவ்வளவு தீமைகள் செய்ய முடியுமோ அவ்வளவு போட்டி போட்டுக்கொண்டு வாக்கு வங்கியினர்கள் செய்து கொண்டு இருக்கின்றனர், கேட்கவேண்டியவர்கள் வாய்பொத்தி இருக்க நமக்கேன் வம்பு, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜன-202012:36:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எவனாவது அரசு ஊழியனுக்கு மாதாந்திர கார் அலவன்ஸ் சம்பாதித்து கொடுத்துக் கொண்டிருக்கும் .. ஹா ஹா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X