பொது செய்தி

தமிழ்நாடு

தெரு பெயர் தெரியாமல் வெளியூர் மக்கள் அவதி வாசகர் புகார்

Added : ஜன 13, 2020
Advertisement
 தெரு பெயர் தெரியாமல் வெளியூர் மக்கள் அவதி வாசகர் புகார்

கோடம்பாக்கம்:இரண்டு ஆண்டுகளாக தெருவில் பெயர் பலகை இல்லாததால், வெளியூரில் இருந்து வரும் மக்கள், முகவரியை கண்டுபிடிக்க முடியாமல்சிரமப்படுகின்றனர்.
கோடம்பாக்கம் மண்டலம், 134வது வார்டில், பராங்குசபுரம் தெரு உள்ளது. இது, கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலை மற்றும் ஐந்து விளக்கு பகுதியை இணைக்கும் முக்கியசாலையாக உள்ளது.இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இச்சாலையில், நடைபாதை சீரமைக்கப்பட்டது. அப்போது, தெருவின் இருபுறமும் இருந்த, மாநகராட்சி பெயர் பலகை அகற்றப்பட்டது.நடைபாதை பணிகள் முடிந்து இதுவரை, பெயர் பலகை அமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதிக்கு புதிதாக வரும் வெளியூர் வாசிகள், முகவரியை கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.தெருவின் இருபுறமும், விரைவில் பெயர் பலகை வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X