பொது செய்தி

தமிழ்நாடு

ஆமை வேக கால்வாய் பணியால் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்

Added : ஜன 13, 2020
Advertisement
 ஆமை வேக கால்வாய் பணியால் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்

குரோம்பேட்டை:குரோம்பேட்டையில், அரசு மருத்துவமனை வாசலில், ஓராண்டாக மழைநீர் கால்வாய் கட்டும் பணி நடப்பதால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலை ஓரத்தில், மழைநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. தொடர்ச்சியாக கால்வாய் கட்டாமல், பகுதி பகுதியாக கட்டுகின்றனர்.பணி முடிந்த பிறகும், அவற்றை இணைப்பது இல்லை. இதனால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லையால், மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வாசலில், எம்.ஐ.டி., மேம்பாலத்தை ஒட்டி, சில மீட்டர் துாரத்திற்கு, கால்வாய் கட்ட பள்ளம் தோண்டினர். ஓராண்டாகியும், இப்பணி முடியவில்லை.கம்பி கட்டிய நிலையிலேயே உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்துடனே செல்கின்றனர்.காலை வேளையில் அப்பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசலும்ஏற்படுகிறது.இரவு நேரத்தில், யாராவது தவறி விழுந்தால், பெரும் விபரீதம் ஏற்படும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனித்து, இனிமேலாவது பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X