பொது செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்

Added : ஜன 13, 2020
Advertisement

மதுரை:மதுரை அவனியாபுரத்தில் ஜன., 15 ல் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய கலெக்டர் வினய் உத்தரவிட்டார்.

இதுகுறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமிஷனர் விசாகன், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், ஆர்.டி.ஓ., முருகானந்தம், சுகாதார துணை இயக்குனர் பிரியா, பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன், தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், அனீஷ் சத்தார், பி.ஆர்.ஓ., தங்கவேலு, உதவி அலுவலர் நவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் தேவையான தென்னை நார் கழிவுகளை பரப்பி காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயங்கள் ஏற்படாதவாறு செய்யவும், கம்பி வலைகளுடன் கூடிய தடுப்புகள் அமைக்கவும், காளைகள் பரிசோதனை மையத்திலிருந்து வாடிவாசல் வரை எளிதில் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X